பொதுமக்கள், வணிகர்கள் வழக்கம் போல் பணம் எடுத்துச் செல்லாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கு வணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றதால், வணிகர்கள் பணத்தை எடுத்துச் செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என வணிகர்கள், தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவு பெற்றுவிட்டபடியால், பொதுமக்கள், வணிகர்கள் வழக்கம் போல் பணம் எடுத்துச் செல்லாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.