செங்கல்பட்டு அருகே பௌர்ணமி பெருவிழா மற்றும் சீதா ராமர் கல்யாண வைபோகம் கொண்டாடப்பட்டது.
நீலமங்கலம் பகுதியில் ஹாஸ்த்ராலயம் யோக சாந்தி குருகுலம் அமைந்துள்ளது. இங்கே பௌர்ணமி பெருவிழா மற்றும் சீதா ராமர் கல்யாண வைபோகம் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவா சங்கத்தினர் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டனர். இந்து மத கொடியேற்றம் மற்றும் பாரத மாதாவிற்கு பால் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபராதனையும் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பகவான் ராமர்- சீதா தேவி மாலை மாற்றும் வைபவமும், ராமர் பட்டாபிஷேக நிகழ்வும் நடைபெற்றது.