விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆலையை மூடுமாறு பலமுறை புகாரளித்து நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விரைந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.