கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர் மற்றும் குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள், அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.