நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மெயின் பஜாரில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது தீயானது அருகில் உள்ள குடோனுக்கு பரவி மளமளவென எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மின் இணைப்பை துண்டித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து உதகை நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.