ஹரியானாவில் சுடுகாட்டு சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர்.
குருகிராமில் உள்ள அர்ஜூன் நகர் பகுதியில் இருக்கும் சுடுகாட்டு சுவர் அருகே சிலர் அமர்ந்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது.
இதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.