சென்னை, மாதவரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நாக கன்னிகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மாதவரம், கல்கொட்டா நகர் பகுதியில் அருள்மிகு ஶ்ரீ நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற மாஹா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருடைய மனைவியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டது.
அங்கிருந்த பக்தர்கள் தங்களது, அன்பான வாழ்த்துக்களை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரிவித்தனர்.