ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தொடர்புடைய விவகாரத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.
மேலும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தீவிரவாதிகள் தொடர்புடைய விவகாரத்தில் முக்கியத்திருப்பமாக ஸ்ரீநகரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.