கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணயை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அப்துல் காதர் விடுப்பில் சென்றதால், பொறுப்பு நீதிபதி ஸ்ரீதர் விசாரித்தார்.
அப்போது முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த செயன் வளையார் மனோஜ் உட்பட 10 பேரும் ஆஜராகாததால், விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.