கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், அமெரிக்காவின் நகமுராவை வீழ்த்தி இளம் வீரரான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் தமிழக வீரர் குகேஷுக்கு வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
கேண்டிடேட்ஸ் செஸ் வரலாற்றில், குகேஷின் வெற்றி, அவரது அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது, எனவும் இவரது சிறந்த செயல்திறன் லட்சக்கணக்கான மக்களை ஊக்குவிக்கிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.