உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, விளம்பர வழக்கு விவகாரத்தில் பாபா ராம்தேவ் பொது மன்னிப்பு கோரினார்.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், அலோபதி மருந்துகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விளம்பர வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில், பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவரும், பொது மன்னிப்பு கோரி பகிரங்க அறிக்கை வெளியிட்டனர்.