ஆகாஷவாணி என்ற பெயர் காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது, ஸ்டாலின் அவர்களே…. என்று தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் திரு.ஸ்டாலின் அவர்களே…. ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது.
காவி என்பது தியாகத்தின் வண்ணம்….
நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி…
அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே…@arivalayam@mkstalin
(3/3)— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) April 21, 2024
எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள்.
காவி என்பது தியாகத்தின் வண்ணம்…. நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி… அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே… எனக் குறிப்பிட்டுள்ளார்.