குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதோடு, ஏழு சுயேச்சை வேட்பாளர்கள் வாபஸ் செய்தனர்.
இதனால் பாஜகவின் முகேஷ் தலால் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக சரித்திரம் படைத்துள்ளது.