மயிலாடுதுறை அருகே கெங்கை அம்மன் கோயில் பால்குட உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
குத்தாலம் அருகே உள்ள அசிக்காட்டில் ஸ்ரீ கெங்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு 24-ம் ஆண்டு காவடி மற்றும் பால்குட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
அப்போது குளக்கரையில் இருந்து ஏராளமானோர் பால்குடம் மற்றும் கூண்டு காவடி, அலகு காவடி உள்ளிட்டவற்றை எடுத்து வீதி உலாவந்து கோயிலை வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மேற்கொள்ளப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.