தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மனைவி, மாமனாரை கொலை செய்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளி புவனேந்திரன். இவரது மனைவி பவித்ரா வேறு ஒரு நபருடன் அலைபேசியில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது தனிப்பட்ட விஷயம் காரணமாக பழனிசெட்டிபட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு பவித்ரா சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த புவனேந்திரன், பவித்ராவையும், தடுக்க வந்த மாமனாரையும் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புவனேந்திரனை போலீசார் கைது செய்தனர்.