தொடர் தோல்வி எதிரொலி : இந்தியா - பாக்., போட்டி வணிக மதிப்பை இழக்கிறதா? -தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான் அணி?
Sep 3, 2026, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் தோல்வி எதிரொலி : இந்தியா – பாக்., போட்டி வணிக மதிப்பை இழக்கிறதா? -தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான் அணி?

Manikandan by Manikandan
Feb 17, 2026, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான போட்டிகள் விரைவில் வணிக மதிப்பை இழக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது. ஒருதரப்பான போட்டி முடிவுகள் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் வெற்றி, பாகிஸ்தானை முன்பைவிட கடுமையாக பாதித்துள்ளது… ஐ.சி.சி. உடனான மோதல் போக்கு, இந்தியா உடன் விளையாட நிபந்தனை என அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புக்குள் தள்ளியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் நடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய அணிக்கு கடுமையான சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சத்தமே இல்லாமல் சரணடைந்தது, பாகிஸ்தான் அணி. இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது.

பாகிஸ்தான் உடனான ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதால், முன்னாள் வீரர்கள், பார்வையாளர்களின் கூற்றுப்படி, இருநாடுகளுக்கு இடையேயான போட்டி வணிக மதிப்பை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் ஒன்பது போட்டிகளில் எட்டு போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது . கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் சல்மான் அலி அகாவின் அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்திருந்தது.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதிலிருந்து, பாகிஸ்தான் அணி தனது பரம எதிரிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறாத அளவுக்கு, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கிரிக்கெட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஆட்டங்கள் வணிக மதிப்பை இழந்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) தௌகிர் ஜியா குறிப்பிட்டார்.

80, 90களில் இந்தியாவுக்கு எதிரான பல போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணிகளில், இடம்பெற்றிருந்த வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக், ரமீஸ் ராஜா போன்ற பிரபலங்கள் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்களாக உள்ளனர்… ஷோயப் மற்றும் சக்லைனின் கூற்றுப்படி, தற்போதைய பாகிஸ்தான் அணியை பார்ப்பது அவர்களுக்கு வேதனையான அனுபவமாகும்.. 80, 90களில் இந்தியாவுடன் விளையாடியபோது இருந்த குணமும், தீரமும் எங்கே? என்று கேள்வி கணைகளை தொடுத்துள்ளனர்.. சில போட்டிகளில் தோற்றாலும், அது எப்போதும் கடினமான போட்டியாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான், இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் கேப்டன் வாசிம் அக்ரம் மற்றும் பிற மூத்த வீரர்கள், வீரர்களை விட்டுக்கொடுக்காமல் இருக்கத் தூண்டுவதையும் சக்லைன் நினைவு கூர்ந்தார்.

1999-ல் சென்னையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் நாங்கள் எப்படி வென்றோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. சச்சின் பேட்டிங் செய்து கொண்டிருந்தார், இந்தியா வெற்றியை நெருங்கி வந்தபோது, ​​சச்சினின் விக்கெட் மட்டும் போதும், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று வாசிம் பாய் எங்களைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தார். இந்த அணியில் அந்த உற்சாகம் எங்கே?” என்று சக்லைன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கராச்சியில் உள்ள ஒரு சினிமாப் பிளெக்ஸின் உரிமையாளரும் திரைப்பட விநியோகஸ்தருமான நதீம் மண்ட்விவாலா, போட்டி திரையிடலின் போது, ​​பாகிஸ்தான் நான்கு ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தபோது கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் வெளியேறுவதற்காக வரிசையில் நின்றதாகக் கூறினார். விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும், மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது, அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது தங்களுக்குத் தெரியும், அது மிகவும் வேதனையானது என்று கிரிக்கெட் எழுத்தாளரும் ஆய்வாளருமான ஓமைர் அலவி குறிப்பிடுகிறார்.. ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள் உட்பட ஒருதரப்பாக முடிவடையும் யாரும் பார்க்க விரும்பாததால் இப்போது ரசிகர்களும் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். போட்டிகள் மிகவும் நெருக்கமாகவும் போட்டித்தன்மையுடனும் மாறாவிட்டால் இந்த போட்டிகளின் வணிக மதிப்பு குறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

Tags: CricketIndia2026 t20 world cupind pak
Share
Tweet
SendShare
Previous Post

விஷ தவளையால் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டாரா? – ரஷ்யா மீது 5 நாடுகள் பகீர் குற்றச்சாட்டு!

Next Post

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு – நயினார் நாகேந்திரன்

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies