மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாரசலாவில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்திற்கு ரயிலில் சென்றபடி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர்,
கேரள அரசின் மோசமான நிர்வாகத்தால், மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
தேர்தலில் தமக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டது தெளிவாக தெரிவதாகவும் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.