உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண் கோவிலுக்கு ஆதரவாக அவருடன் ராமாயண தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராமானந்த் சாகரின் ‘ராமாயணத்தில்’ அருண் கோவில் ராமராக நடித்தார். அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தீபிகா சிக்லியா, சுனில் லஹிரி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர் .