ராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம் பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் 9-ம் நாளன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தில், வல்மீக நாதர் மற்றும் பாகம் பிரியாள் அம்மன் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அப்போது பெண்கள் சிவப்பு சேலை அணிந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.