அடுத்த 5 ஆண்டுகளில் தான் செய்யப்போகும் திட்டங்கள் குறித்து மக்களிடம் பகிர்ந்து கொள்ள இருப்பதாக மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கேராளாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் மத்திய அமைச்சரும் திருவனந்தபுர தொகுதியின் பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
திருவனந்தபுரத்தில் ”பாரம்பரிய விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் அதிகம் வசிக்கின்றனர், எனவும் அடுத்த 5 ஆண்டுகளில் நான் மக்களுக்காக என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி அவர்களிடமே பகிர்ந்துகொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.