நடிகர் கமல்ஹாசனின் மாமா சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் மாமா சீனிவாசன், விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 92 வயதான இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று சீனிவாசன் உயிரிழந்தார். இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சீனிவாசன் உடலுக்கு கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிகர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.