சித்ரா பௌர்ணமியை ஒட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கடந்த 21-ம் தேதி முதல் நாளை வரை, 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து சதுரகிரிக்கு வருகை தந்த பக்தர்கள், தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீவிர சோதனைக்கு பின்னரே, வனத்துறையினர் பக்தர்களை மலையேற அனுமதித்தனர்.