இந்திய நாடாளுமன்றத்தில் மகளிர் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பெருமிதம் தெரிவித்தார்.
ஐக்கிய நாட்டு சபைக் கூட்டத்தில் இந்தியா சார்பாக நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பேசினார்.
அப்போது பேசியவர்,
மாற்றத்தின் முகவர்களாக அதிகாரம் பெற்ற பெண்களின் பங்கை இந்தியா அங்கீகரித்துள்ளது எனவும் சட்டமன்ற அவையிலும் சரி, நாடாளுமன்ற அவையிலும் சரி பெண்களுக்கென 33 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து அதற்கான உறுப்பினர்கள் பதவியில் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார்.