கடலூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்த சுமதி என்பவரது குடும்பத்தினர், கடந்த 8 ஆண்டுகளாக ஏல சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் ஏலச்சீட்டு தொகையை தராமல் சுமதியின் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி, மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு அளித்தனர்.