மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது என தெரிவித்தார்.
மேலும் கொரோனா, உக்ரைன் போர் போன்ற பல்வேறு சூழல்களிலும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது எனவும் தெரிவித்தார்.