10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதி, மத அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய நட்டா,
10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதி, மத அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன. பிரதமர் மோடி அரசியலின் வரலாறு மற்றும் கலாசாரத்தை மாற்றியுள்ளார். தேச விரோதிகள் மற்றும் நாட்டை பலவீனப்படுத்துபவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதும் ஆதரவாக நிற்கின்றன.
2008ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஏன் அழுதார்?.
தீவிரரவாதிகளுக்காக சோனியா அழுதார் என காங்கிரஸ் தலைவர்களே கூறினர். துரோகிகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?. இதன் பின்னணி என்ன?. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.