எண்ணூரில் நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை சேர்ந்த பரத் என்ற இளைஞர் நண்பர்களுடன் பாரதியார் நகர் அருகே உள்ள கடலில் குளிக்கச் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக ராட்சச அலையில் சிக்கிக்கொண்டார். இளைஞரை மீட்ட மீனவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பரத் ஏற்கனவே இறந்துவிட்டத்தாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.