ராணுவ உடையில் மது பானம் கடத்திய ஆசாமி தனது தவறான சல்யூட்டால் போலீசில் சிக்கினான்.
குஜராத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி சென்ற நபரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
இதனையடுத்து காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு தெரிவித்த அந்த ஆசாமி, அங்கிருந்த காவலருக்கு சல்யூட் அடித்துள்ளான்.
இதில் சந்தேகம் அடைந்த அந்த காவலர் மர்ம ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மதுபானம் கடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர்.