சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா நிலாச்சோறு நிகழ்வை ஒட்டி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகளைக் கொண்டு வந்து வைகை ஆற்றங்கரையோரம் நிலவொளியில் உண்டு மகிழ்ந்தனர்.
மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவைத் தொடர்ந்து நிலாச்சோறு மண்டகப்படி நடைபெறுவது வழக்கம்.
இதனை ஒட்டி,மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது வீடுகளில் சமைத்த உணவுகளை வைகை ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, நிலவு வெளிச்சத்தில் உண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களது வீடுகளில் சமைத்த உணவுகளைக் கொண்டு வந்து அனைவருடனும் பகிர்ந்துண்டனர்.