சென்னையில் பாஜக பூத் ஏஜெண்ட் கௌதமன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, தென் சென்னை பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது தென்சென்னை 13 -வது வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுபோட முயன்றனர். இதனை, தடுத்த பாஜக பூத் ஏஜெண்ட் கௌதமன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், கௌதமன் வீட்டிற்கு சென்றும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், காயமடைந்த பாஜக நிர்வாகியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது dl”13 -வது பூத்தில் இந்த அசம்பாவிதம் நடந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கௌதமன் வீட்டிற்கு சென்று திமுக ஆதரவு அரசு அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இது போன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.