பொது மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பாஜகவுக்கு நாட்டை விட பெரியது எதுவுமில்லை என்றும், ஆனால் காங்கிரசுக்கு குடும்பமே முக்கியம் என தெரிவித்தார். பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஒரு பதவி-ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது, நாட்டிற்காக கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட பலர் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி மூலம் பொதுமக்களின் பாதி வருமானத்தை பறித்து விடும் என்று தெரிவித்த பிரதமர், மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி, எப்படியாவது நாற்காலியை கைப்பற்ற வேண்டும் என பல்வேறு விளையாட்டுகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.