தெலுங்கானாவில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வரதன்ன பேட்டை கிராமத்தில் வசித்து வந்த கணேஷ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனை நண்பர்களுடன் கொண்டாட நினைத்த கணேஷ் தனது 3 நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார். கொண்டாட்டம் முடிந்து 4 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது