போடியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையம் அருகே டி.வி.கே.கே நகரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் நள்ளிரவில் தீ பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.