திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஆலங்காயம் அடுத்துள்ள மிட்டூர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் வட்டார வளர்ச்சி அலுவலகதிற்கு சென்றுள்ளார்.
அப்போது டீ கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவரது இருசக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளனர்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இளைஞர்களை துரத்திச் சென்றுள்ளனர். ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொருவரை பிடித்த பொதுமக்கள் அவரை கம்பத்தில் கட்டி வைத்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.