தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள நாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சூரிய பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள நாகேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சூரிய வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டும் மூலவர் நாகேஸ்வரர் லிங்கர் மீது சூரிய கதிர்கள் படர்ந்தது, அதனை ஒட்டி நாகேஸ்வரருக்கும், சூரியதேவனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.