தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.