கடலூரில் கடந்த 2015-ம் ஆண்டு மணல் குவாரியை மூடக் கோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில், அமைச்சர் சிவசங்கர் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வெள்ளாற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரியை மூடக்கோரி, கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக, சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக, அமைச்சர் சிவசங்கர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் இவ்வழக்கின் விசாரணை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.