பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், கோழிகமுத்தி யானைகள் முகாமிலுள்ள யானைகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
கோழிகமுத்தி யானைகள் முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே இங்குள்ள யானைகள் மானாம்பள்ளி, வரகளியார் மற்றும் சின்னார் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த யானைகள் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கோழிகமுத்தி முகாமிற்குக் கொண்டு வரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.