நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் 573 தூய்மைப் பணியாளர்கள் சுய உதவி குழுவின் கீழ் பணி செய்து வருகின்றனர். இதில், சுய உதவி குழு பணியாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கேட்டதற்கு அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சுய உதவிக்குழு மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுட்டு வருகின்றனர்.