தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, கடும் வெயில் வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, கடும் வெயில் வீசக் கூடும் என்றும் தர்மபுரி, வேலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூரில் கடும் வெயில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாகும் எனவும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப நிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.