நம்ப முடியாத வகையில் கடினமான பணிகளைச் சிறப்பான முறையால் முடித்துள்ளார். அவர் வலிமையான நேர்மையான மனிதர். அவரால் மொத்த இந்தியாவும் உயர்வடைகிறது என்று பிரதமர் மோடிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார், அமெரிக்காவின் ஜே பி மார்கன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டைமன். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எகனாமிக் கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஜேபி மோர்கன் நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டைமன் இந்தியாவின் அசுர வளர்ச்சி பற்றியும் அதற்கு காரணமான பிரதமர் மோடி பற்றியும் புகழாரம் சூட்டியுள்ளார்.
வறுமையில் இருந்து 40 கோடி இந்தியர்களை மீட்டெடுத்த பிரதமர் மோடி, ஒரு நம்ப முடியாத பணியை செய்து முடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
கல்விமுறையும், உள்கட்டமைப்பும் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கும் இந்தியாவில், அனைத்து மக்களும் கை விரல் ரேகை, கருவிழி மூலமாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற நடைமுறையை பிரதமர் மோடி சாத்தியமாக்கி இருக்கிறார் என்றும் ஜேமி டைமன் பாராட்டியுள்ளார்.
70 கோடி மக்களை வங்கி கணக்குகளைத் தொடங்க வைத்திருக்கிறார் என்றும்,
மேலும் பல்வேறு மாநிலங்களில் வெல்வேறு விதமாக இருந்த மறைமுக வரி விதிப்பு முறைகளை மாற்றி , ஊழலை ஒழித்திருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
10 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி நடைமுறைப்படுத்திய சீர்திருத்தங்கள் இந்திய மக்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஜேமி டைமன், உலகமே வியக்கும் வகையில் ஒட்டு மொத்த இந்தியாவும் உயர்வடைகிறது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடி தான் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வலிமையான நேர்மையான மனிதராக இருப்பதால் தான் மொத்த இந்தியாவும் வேக வேகமாக வளர்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஜேமி டைமன்,
உலக அளவில் புவி சார் அரசியல் , உலகளாவிய பொருளாதார சரிவு என மற்ற நாடுகளுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக பிரதமர் மோடி விளங்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
முத்தாய்ப்பாக ஜேபி மார்கனின் தலைமை செயல் அதிகாரி ‘ இப்படி ஒரு தலைவர் அமெரிக்காவுக்கு தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.