புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் விமான சேவை செயல்பட்டு வந்தது.
இதனிடையே வார இறுதி நாட்களை தவிர மற்ற நாட்களில் போதிய பயணிகள் இல்லாததால் கடந்த மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வழித்தடங்களுக்கு இண்டிகோ நிறுவனம் மீண்டுவிமான சேவையை தொடங்கவுள்ளது.