பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் – திமுக கூட்டணி முயற்சி செய்வதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முயன்றது எனவும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை தனியாக பிரித்து மத அடிப்படையில் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை மையப்படுத்தியே, தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் ஒரு பகுதி பறிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது எனவும், அண்ணல் அம்பேத்கர், தலைவர்களும் பெரும் முயற்சியால் பெறப்பட்ட இடஒதுக்கீட்டை பறித்து, தங்கள் வாக்கு வங்கிக்கு பயன்படுத்த காங்கிரஸ் கட்சியும், திமுகவும் திட்டமிடுவது கடும் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.