சஹாரா பாலைவனத்தின் புழுதிப் புயல் காரணமாக கிரீஸ் நாட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பாலைவனப் பகுதியான சஹாரா பாலைவனத்தில் காலநிலையால் புழுதிப்புயல் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அதிகப்படியான தூசுக்கள் குடியிருப்புக்குள் வரத்தொடங்கிய்து. மேலும் இயற்கை மாசடையும் இந்த நிகழ்வால் ஆரஞ்சு நிறத்தில் வானம் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் உடல்நிலை பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.