ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் ஏராளமான திமிங்கிலங்கள் கடலின் ஆழ்ந்த பகுதிகளிலிருந்து மேற்பரப்பிற்கு வரத்தொடங்கியுள்ளது.
இரையை தேடி வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கும் நிலையில், 140 திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது. இதனால் அதிகாரிகள் உயிருடன் இருக்கும் திமிங்கிலங்களை உடனே தண்ணீருக்குள் அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், இறந்த திமிங்கிலங்களை ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பி வருகிறோம் என கடல்சார் அலுவலகர்கள் தெரிவித்தனர்.