மகாராஷ்டிராவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர் ஒருவர் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தார்.
நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
அந்தவகையில் மகாராஷ்டிராவில் உள்ள 8 தொகுதிகளிலும் நடைபெறும் தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் வதர்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்றைய தினம் திருமணம் நடைபெறவுள்ள இளைஞர் மணக்கோலத்தில் வருகை தந்து வாக்களித்தார்.