வார விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
முகூர்த்த நாளான இன்றும், வார விடுமுறை நாட்களான நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதல் பயணிகள் பயணிப்பார்கள்.
அதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று கூடுதலாக 280 சிறப்பு பேருந்துகளும், நாளை 355 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அதுபோல சென்னை கோயம்பேட்டிலிருந்து இன்றும், நாளையும் 55 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.