ஐ.நா பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட ‘விண்வெளியில் அணு ஆயுதப் போட்டி’ குறித்த தீர்மானத்தை, ரஷ்யா தனது veto வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட அணுசக்தி கருவிகளை ரஷ்யா தயாரிக்கிறது அல்லது தயாரிக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறது என்று அமெரிக்கா நீண்ட ஆண்டுகளாகவே குற்றம் சாட்டி வருகிறது.
உளவுத்துறை தகவலின் படி, ரஷ்யாவின் ஆபத்தான நடவடிக்கைகள் பற்றி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை செய்து வந்தது அமெரிக்கா. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் , விண்வெளியில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க தீர்மானம் முன் மொழியப் பட்டது .
1967 ஆம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களை விண்வெளியில் உருவாக்கவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானமே இது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக ஆதரவாக 13 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இந்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் சீனா புறக்கணித்தது.
இந்த தீர்மானத்தை ரஷ்யா எதிர்த்தது. மேலும், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு சபையில் முன்மொழியப்பட்ட விண்வெளியில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது.
இந்த தீர்மானத்தை ஒரு அழுக்கு காட்சி என்று குறிப்பிட்ட ரஷ்ய தூதுவர் வசிலி நெபென்சியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் தயாரித்த இந்த தீர்மானம் ஒரு “இழிந்த தந்திரம்” என விமர்சித்தார்.
ரஷ்ய அதிபர் புதினின் வீட்டோ பயன்படுத்தும் முடிவுக்கு பதிலளித்து பேசிய அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறும் ரஷ்யா, தீர்மானத்தைத் தடுத்திருப்பதை பார்க்கும் போது மாஸ்கோவின் கொள்கை மீது சந்தேகம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களை விண்வெளியில் நிலைநிறுத்த விரும்பவில்லை என்பது உண்மை என்றால், முக்கியமான இந்த தீர்மானத்தை வீட்டோ பயன்படுத்தி தோற்கடித்திருக்காது என்று குறிப்பிட்டார்.
வாக்கெடுப்புக்கு நடப்பதற்கு முன் மூத்த அமெரிக்க அதிகாரிகள், விண்வெளியில் அணு ஆயுத போட்டி குறித்த தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ செய்தால், ரஷ்ய அதிபர் புதின் எதையோ மறைக்கப் பார்க்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகும் என்று தெரிவித்திருந்தனர்.
வாக்கெடுப்புக்குப் பிறகு தனது உரையில் இந்த விஷயங்களை குறிப்பிட்ட, ஐநா.,வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், வாக்கெடுப்பில் கலந்தகொள்ளாமல் புறக்கணித்த சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஐ நா பாதுகாப்பு சபையில் , கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் சில மாற்றங்களை செய்ய ரஷ்யாவும் சீனாவும் முன்வைத்த தீர்மான திருத்தங்களுக்கு எதிராக பாதுகாப்பு சபை வாக்களித்தது.
கடந்த மார்ச் மாதம் , ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலை தொடருமானால், இருந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் மாஸ்கோ தயாராக உள்ளது என்று கூறியதை இங்கே நினைவு படுத்தி பார்ப்பது நல்லது என ஐ நா சபையின் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்ரைன்- ரஷ்யா போர் , பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் , ஈரான் -இஸ்ரேல் போர் என உலகத்தில் போர் சுழலும் போர் பதற்றங்களும் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் விண்வெளியிலும் அணுஆயுத போட்டி என்பது எங்கே பொய் முடியுமோ என்பது தான் உலக மக்களின் கவலையாக இருக்கிறது.