தேனியில், ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து, பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேனியைச் சேர்ந்த அஜித் என்பவர், அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.