கரூரில் பாஜக நிர்வாகி மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு கைது செய்தாகக் கூறி கரூர் – தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்ன தாராபுரத்தை அடுத்த வேட்டையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி, பாஜக மாவட்ட பட்டியலணி நிர்வாகியாக உள்ளார்.
இவருக்கும், அதே சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ரவி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கரூர் – தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர்.